Question & Answer – 33

ஐயம் தெளிதல்

தத்துவ விசாரம்

கேள்வி எண் 33: ஆத்மா பிரபஞ்சத்துக்கு அப்பாற்பட்டது. அப்படியானால் ஆத்ம சாந்தி என்பதன் பொருள் என்ன?

பதில்: ஆத்மா என்னும் சொல் பல படித்தரங்களில் வைத்து உலக நடைமுறையில் கையாளப்படுகிறது. அந்த ஆத்மாவுக்குச் சிறிது அன்னம் போடு என்னும் கூற்றிலே ஆத்மா என்னும் சொல் உடலைக் குறிக்கிறது. ஆத்மஹத்தி பண்ணிக்கொள்ளுதல் என்னும் கூற்றிலே அறிவிலி ஒருவன் உடலைத் தான் என்று கருதி அதைப் பாழ்படுத்தச் செய்கின்ற முயற்சியாம். ஆத்ம சாந்தி என்பதன் பொருள் மனோசாந்தி எனப் பொருள்படுகிறடு. ஏனென்றால் ஜீவாத்மன் ஒருவன் உடலின் கூறுகளனைத்தையும் ஆத்மாவின் கூறு எனத் தவறுதலாக எண்ணிக்கொள்வது போன்று மனதில் உண்டாகின்ற இன்ப துன்பங்களை ஆத்மாவுக்க்குரியன என எண்ணிக் கொள்கிறான். அந்த எண்ணத்தின்படி ஆத்ம சாந்தி என்பதை மனோசாந்தி என்றுதான் பொருள்படுத்திக் கொள்ள வேண்டும். ஆத்மாவோ தனது நிஜநிலையில் பிரபஞ்சத்தின் கூறுகளனைத்துக்கும் அப்பாற்பட்டதாம்.

தெளிவித்தவர்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s