Question & Answer – 34

ஐயம் தெளிதல்

தத்துவ விசாரம்

கேள்வி எண் 34: பிறப்பைத் தோற்றம் என்றும் மரணத்தை அழிவு என்றும் கூறுகிறோம். அழிவில்லாத ஆத்மா எப்படி வெவ்வேறு தோற்றம் எடுக்கிறது?

பதில்: நாம் பழுதுபட்ட உடையைக் களைந்துவிட்டுப் புதிய உடையைப் போட்டுக் கொள்ளுவது போன்று ஜீவாத்மா பழுதுபட்டுப் போன தேகத்தைக் களைந்துவிட்டுப் புதிய தேகத்தை எடுத்துக் கொள்கிறது. ஜீவாத்மா சாவதில்லை. பழைய உடலின் அழிவை மரணம் என்றும், புதிய உடலின் தோற்றத்தைப் பிறப்பு என்றும் பகர்கிறோம். ஜீவாத்மாவுக்கு மூன்று சரீரங்கள் உண்டு. அவை முறையே ஸ்தூல சரீரம், சூக்ஷ்ம சரீரம், காரண சரீரம் எனக் கூறப்படுகின்றன. ஸ்தூல சரீரத்தின் தோற்றமும், மறைவும் நமக்குத் தென்படுகின்றன. பிறப்பெடுப்பது தோற்றம். தோன்றிய உடல் வளர்ந்து தேய்ந்து மறைகிறது. அது மரணம். உடலில் வருகிற இந்தத் தோற்றமும், மறைவும் உடலுக்குரியதேயொழிய ஜீவாத்மாவுக்கல்ல. ஜீவாத்மா தோன்றாத நிலையில் சூக்ஷ்ம சரீரத்திலும், காரண சரீரத்திலும் இருக்கிறது. தக்க சூழ்நிலை அமைகிறபொழுது சூக்ஷ்ம சரீரத்துக்கு ஏற்ற புதிய ஸ்தூல சரீரத்தை அது தனக்குத் தானே உண்டு பண்ணிக் கொள்ளுகிறது. பொருத்தமான சூழ்நிலையில் விதையொன்று செடியாக வளர்வதற்கு நிகர் ஸ்தூல சரீரம் எடுப்பது. அக்ஞானமே காரண சரீரம் என்று சொல்லப்படுகிறது. அக்ஞானத்தில் கட்டுண்டிருக்கும் காலமெல்லாம் சூக்ஷ்ம சரீரமும், ஸ்தூல சரீரமும் மாறிமாறியமைந்து வருகின்றன. ஸ்தூல சரீரத்துக்கு மாறுதல் பிறப்பு இறப்பு வாயிலாக வருகிறது. சூக்ஷ்ம சரீரத்துக்கு, மனப்பான்மை மாறியமைவதற்கு ஏற்றவாறு மாறுதல் அமைகிறது. மாறிய மனப்பான்மையை அனுசரித்தே புதிய ஸ்தூல சரீரம் வந்து அமைகிறது. எப்படி சூக்ஷ்ம சரீரம் கட்புலனாவதில்லையோ, அப்படி ஜீவாத்மனும் கருவி கரணங்களால் காணப்படுவதன்று. அதனுடைய சாந்நித்தியத்தைச் சரீரங்களின் வாயிலாகத்தான் தெரிந்துகொள்ளுகிறோம். ஆத்மா தன்னில் தானாக இருப்பதைத்தான் அறிகிறது. அது ஒருநாளும் காணப்படுபொருள் ஆவதில்லை.

தெளிவித்தவர்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s