THE GARLAND OF PARAPARAM – 40

ஸ்ரீ தாயுமானவர் இயற்றிய

பராபரக்கண்ணி

கண்ணி 40:

வஞ்சனையும் பொய்யும்உள்ளே வைத்தழுக்காறாய் உளறும்

நெஞ்சனுக்கும் உண்டோ நெறிதான் பராபரமே.

  • வஞ்சனை – பிறருக்குக் கேடுசூழ நினைத்தல்.
  • பொய் – உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுதல்.
  • அழுக்காறு – பொறாமை.
  • உளறுதல் – பொருந்தாத பேச்சு.

விளக்கம்:

சித்த சுத்தி அல்லது அந்தக்கரணத் தெளிவு உண்டாவதற்கு ஏற்ப ஆத்ம சாதகன் பரவஸ்துவை அனுபூதியில் அறிந்துகொள்ளத் தகுதி உள்ளவனாகின்றான். சுத்தி அடையாத மனத்தில் குறைநிலைகள் பல இடம் பெறுகின்றன. அக்குறைநிலைகளுள் மூன்று குறைகள் ஈண்டு எடுத்து இயம்பப்படுகின்றன. வஞ்சனை, பொய், அழுக்காறு என்பன அவைகளாகும். இக்குறைநிலை உடையவர்களின் அழிவை அல்லது தாழ்வை இராமாயணம், மஹாபாரதம் போன்ற நூல்களின் வாயிலாகவும், நமது நித்திய வாழ்விலும் நாம் காணலாம்.

நெறி என்பது சன்மார்க்கம். எது மனிதனைக் கடவுளுக்கு அருகில் எடுத்துச் செல்லுகின்றதோ அது சன்மார்க்கம். வஞ்சனை, பொய், பொறாமை ஆகிய கேடுகளை உள்ளத்தினுள்ளே வைத்துக்கொண்டு மேலாம் தத்துவங்களைப் பற்றிப் பேசுகிற பேச்சு உளறுதலுக்கு ஒப்பாகிறது. இக்கேடுகளை நெஞ்சத்தினின்று ஒதுக்கித் தள்ளாதவனுக்குச் சன்மார்க்கம் வாய்ப்பதுமில்லை; அவன் சத் பொருளை அடையப்போவதுமில்லை. ஈசா! இக்கேடுகளினின்று என்னைக் காப்பாற்றுவாயாக என்பது இக்கண்ணியில் அமைந்துள்ள பிரார்த்தனையாம்.

-ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.


THE GARLAND OF PARAPARAM

By

Sri Tayumana Swami

வஞ்சனையும் பொய்யும்உள்ளே வைத்தழுக்காறாய் உளறும்

நெஞ்சனுக்கும் உண்டோ நெறிதான் பராபரமே.

கண்ணி – 40.

vanjanaiyum poiyumuLLE vaiththazukkArAy uLaRum

Nenjanukkum undO neRithAn parAparamE.


To me who holdeth

Deceit and falsehood at heart

And blabbereth in envious thought,

Is there redemption ever?

Oh Para Param!

-Hymns by

‘Kaviyogi’ Suddhananda Bharathi

Translation:

Hey Paraaparam, am I competent to the path of virtue while I blab induced by fraud, falsehoodn and envy?

-Swami Chidbhavananda.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s