Question & Answer – 38

ஐயம் தெளிதல்

தத்துவ விசாரம்

கேள்வி எண் 38: ஆன்மா, உடல் இவற்றில் அழியாதது எது? உடலை அழியாமல் காக்கலாம் என்று சித்தர்கள் கூறுகிறார்களே?

பதில்: நித்திய அநித்திய வஸ்துவைப் பற்றி விசாரம் பண்ணுவது ஆத்ம சாதனத்தில் இன்றியமையாத பகுதியாக வந்துள்ளது. புருஷன், பிரகிருதி என்பன இரண்டு கூறுகள். புருஷன் எனப் பகரப்படுவது ஆத்ம சொரூபம். பிரகிருதி எனப் பகரப்படுவது பிரபஞ்சம். இவ்விரண்டனுள் புருஷ தத்துவம் என்றைக்கும் நிலைத்துள்ளது. பிரகிருதி நிலையற்றது. அது ஓயாது மாறி அமைந்துகொண்டிருக்கிறது. அது சிருஷ்டி காலத்தில் தோற்றத்துக்கு வருகிறது. பிரளய காலத்தில் அது ஒடுங்குகிறது.

மனிதனுடைய அமைப்பில் புருஷ தத்துவம், பிரகிருதி தத்துவம் இரண்டும் அமைந்திருக்கின்றன. புருஷ தத்துவம் யாண்டும் நிலைத்திருக்கிறது. பிரகிருதி தத்த்வமோ சிசுவாகத் தோற்றத்துக்கு வருகிறாது; வளர்கிறது; பிறகு தேய்கிறது; கடைசியில் மறைகிறது; இது இயற்கையின் கூறு. மாறுபாடடைந்து மறைந்துபட்டுப் போகும் தத்துவத்தை மாறுபாடடையாது வைத்திருப்பது எங்ஙனம்? மறைந்துபட்டுப் போவதைத் தடுப்பது எங்ஙனம்?

எது ஓயாது ஜீரணமாகிக் கொண்டிருக்கிறதோ அது தேகம். அப்படி அழியும் தன்மையுடைய தேகத்தை நெடுநாள் அழியாது காப்பாற்றலாம். அப்படிச் செய்வதற்குக் காயசித்தி என்று பெயர். கெட்டுப்போகும் உணவை நெடுநாள் கெட்டுப் போகாது காக்கலாம். பின்பு அது கெட்டுப் போகிறது. அதேவிதத்தில் சித்தியடையப் பெற்ற தேகமும் பிரகிருதியினின்று வந்திருப்பதால் அது மறைந்துபட்டுப் போகின்றது. எந்த சித்தபுருஷனாவது ஆயிரக்கணக்கான வருஷங்களாக இருந்து வந்ததற்குச் சான்று இல்லை. இனியும் இருக்கப் போவதில்லை. ஆகையினால் இது வெறும் நம்பிக்கைக்குரிய விஷயமே ஒழிய தத்துவத்துக்குப் பொருந்தாது.

தெளிவித்தவர்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s