Sri Tayumanavar-Sri Ramana Maharshi-Part 3

ஆகாரபுவனம் – சிதம்பர ரகசியம்

photofunia-1475564811

These are some of the verses from Thayumanavar that Bhagavan Sri Ramana Maharshi selected. The first three describe the suffering inherent in samsara, while the remainder contain Mauna Guru’s prescriptions for transcending it:

 நான்என்னும் ஓர்அகந்தை எவர்க்கும் வந்து

நலிந்தவுடன் ஜகமாயை நானா ஆகித்

தான்வந்து தொடரும்;இத்தால் வளரும் துன்பச்

சாகரத்தின் பெருமைஎவர் சாற்றவல்லார்?

ஊன்என்றும் உடல் என்றும் கரணம் என்றும்

உள்என்றும் புறம்என்றும் ஒழியா நின்ற

வான்என்றும் கால்என்றும் தீநீர் என்றும்

மண்என்றும் மலைஎன்றும் வனமது என்றும்,

ஆகாரபுவனம் – சிதம்பர ரகசியம் 15

In all people, as soon as the ego-sense known as ‘I’ arises to afflict them,

the world-illusion, manifesting as multiplicity, follows along behind.

Who might have the power to describe the vastness

of the ocean of misery that grows out of this:

as flesh; as the body; as the intellectual faculties;

as the inner and the outer; as the all-pervasive space;

as earth, water, fire, and air; as mountains and forests;

as the multitudinous and mountainous visible scenes;

‘Akarabuvanam-Chidambara Rahasyam’, 15

மலைமலையாம் காட்சிகண்கா ணாமை ஆதி

மறப்புஎன்றும் நினைப்பு என்றும் மாயா வாரி

அலைஅலையாய் அடிக்கும்இன்ப துன்பம் என்றும்

அதைவிளைக்கும் வினைகள் என்றும் அதனைத் தீர்க்கத்

தலைபலஆம் சமயம்என்றும் தெய்வம் என்றும்

சாதகர்என்றும் அதற்குச் சாக்ஷி ஆகக்

கலைபலஆம் நெறிஎன்றும் தர்க்கம் என்றும்

கடல்உறும்நுண் மணல்,எண்ணிக் காணும்போதும்,

ஆகார புவனம் – சிதம்பர ரகசியம் 16.

as that which is invisible, such as remembering and forgetting;

as the joys and sorrows that crash upon us, wave upon wave, in maya’s ocean;

as the deeds that give rise to these;

as the religions of manifold origin that [try to] put an end to them;

as their gods, as their spiritual aspirants, and as the methods

described in many a treatise that bear witness to their practices;

and as the doctrinal wrangling amongst them?

It is like trying to count the fine grains of sand on the seashore.

‘Akarabuvanam-Chidambara Rahasyam’, 16

காணரிய அல்லல்எல்லாம் தானே கட்டுக்

கட்டாக விளையும்; அதைக் கட்டோ டேதான்

வீணினில்கர்ப் பூரமலை படுதீப் பட்ட

விந்தைஎனக் காணஒரு விவேகம் காட்ட,

ஊண்உறக்கம் இன்பதுன்பம் பேர்ஊர் ஆதி

ஒவ்விடவும், எனைப்போல உருவம் காட்டிக்

கோண்அற ஓர் மான் காட்டி மானை ஈர்க்கும்

கொள்கைஎன அருள்மௌன குருவாய் வந்து,

ஆகார புவனம் – சிதம்பர ரகசியம் 17.

In order to teach me to discern the truth

of how all these woes, impossible to measure –

which spontaneously accumulate, multiplying bundle by bundle –

were insubstantial, like the spectacle of a mountain of camphor

that disappears entirely at the touch of a flame,

he associated with food, sleep, joy, misery, name-and-place,

and wearing a bodily form similar to my own,

he came as the grace-bestowing Mauna Guru

to free me from defilement, in just the same way that a deer

is employed to lure another deer.

‘Akarabuvanam-Chidambara Rahasyam’,17.

The idea that God takes on a human form to catch other beings who have this same form is one that appears in many spiritual texts. Bhagavan explained this particular reference in the following reply:

The Master appears to dispel … ignorance. As Thayumanavar puts it, he appears as a man to dispel the ignorance of a man, just as a deer is used as a decoy to capture the wild deer. He has to appear with a body in order to eradicate our ignorant ‘I am the body’ idea.

bhagavan-reading-2

The next six verses contain the upadesa that Mauna Guru gave to Thayumanavar, and a description of the effect it had on him:

வந்துஎன்உடல் பொருள்ஆவி மூன்றும் தன்கை

வசம்எனவே, அத்துவா மார்க்கம் நோக்கி,

ஐந்துபுலன் ஐம்பூதம் கரணம் ஆதி

அடுத்தகுணம் அத்தனையும் அல்லை அல்லை;

இந்தஉடல் அறிவுஅறியா மையும்நீ அல்லை;

யாது ஒன்று பற்றின்அதன் இயல்பாய் நின்று

பந்தம்அறும் பளிங்குஅனைய சித்து நீ உன்

பக்குவம்கன்கு அறிவிக்கும் பான்மை யேம்யாம்.

ஆகார புவனம் – சிதம்பர ரகசியம் 18

Coming thus, he claimed my body, my belongings, my very life

as his possessions, and teaching the path of rejection, he declared:

‘The five senses, the five elements, the organs of action, and all the rest,

you are not. You are none of these.

Nor are you any of the qualities that pertain to these.

You are not the body, nor are you knowledge and ignorance.

You are chit, the real, which is like a crystal,

reflecting the qualities of whatever is placed before it,

and yet having no connection with it.

It is my inherent nature to enlighten you

when I find that you are ripe for it.’

‘Akarabuvanam-Chidambara Rahasya’ 18

அறிவாகி ஆனந்த மயமா யென்றும்

அழியாத நிலையாகி யாதின் பாலும்

பிறியாமல் தண்ணருளே கோயி லான

பெரியபரம் பதியதனைப் பேறவே வேண்டில்

நெறியாகக் கூறுவன்கேள் எந்த நாளும்

நிர்க்குணநிற் குஉளம்வாய்த்து நீடு வாழ்க;

செறிவான அறியாமை எல்லாம் நீங்க

சிற்சுகம்பெற் றிடுக;பந்தந் தீர்க வென்றே.

ஆகார புவனம் – சிதம்பர ரகசியம் 19

‘If you desire to gain the vast, supreme reality

that is the temple of refreshing grace,

inseparable from all that is, becoming pure consciousness

and obtaining the indestructible state whose nature is bliss,

listen as I explain to you the proper means:

May you live long, winning in your heart

the reality that is devoid of all qualities!

May you attain the state of bliss-consciousness,

so that all the dense accumulation of ignorance disappears!

May you liberate yourself from bondage!’

‘Akarabuvanam-Chidambara Rahasya’ 19

பந்தமறும் மெஞ்ஞான மான மோனப்

பண்பொன்றை அருளியந்தப் பண்புக் கேதான்

சிந்தையில்லை நானென்னும் பான்மை யில்லை

தேசமில்லை காலமில்லை திக்கு மில்லை

தொந்தமில்லை நீக்கமில்லை பிறிது மில்லை

சொல்லுமில்லை இராப்பகலாந் தோற்ற மில்லை

அந்தமில்லை ஆதியில்லை நடுவு மில்லை

அகமுமில்லை புறமில்லை அனைத்து மில்லை.

ஆகார புவனம் – சிதம்பர ரகசியம் 20

Through his grace, he imparted to me the state of mauna,

the true knowledge in which bondage is abolished:

‘For that state, there is no thought, no “I” sense,

no space, no time, no directions, no pairs of opposites,

nothing lost, nothing other, no words,

no phenomena of night and day,

no beginning, no end, no middle, no inner or outer.

Nothing is.’

‘Akarabuvanam-Chidambara Rahasya’ 20

இல்லைஇல்லை என்னின்ஒன்றும் இல்லாது அல்ல;

இயல்புஆகி என்றும்உள்ள இயற்கை ஆகிச்

சொல்லரிய தன்மையதாய் யான்தான் என்னத்

தோன்றாதுஎல் லாம்விழுங்கும் சொரூபம் ஆகி

அல்லைஉண்ட பகல்போல அவித்தை எல்லாம்

அடையஉண்டு, தடைஅறஉன் அறிவைத் தானே

வெல்லஉண்டு,இங்கு உன்னையும்தான் ஆகக் கொண்டு

வேதகமாய்ப் பேசாமை விளக்கும் தானே.

‘When I say: “It is not, it is not”, this is not a state of nothingness.

It is pure identity; it is the nature that eternally endures,

a state that cannot be expressed in words.

It is the swarupa which engulfs everything,

so that neither ‘I’ nor anything else appears.

As the day consumes the night, it consumes ignorance entirely.

Easily overcoming and swallowing up your personal consciousness,

it transforms your very self, here and now, into its own Self.

It is the state that distinguishes itself as selfluminous silence.’

‘Akarabuvanam-Chidambara Rahasya’ 21

தான்ஆன தன்மயமே அல்லால் ஒன்றைத்

தலைஎடுக்க ஒட்டாது; தலைப்பட்டு ஆங்கே

போனாலும் கர்ப்புர தீபம் போலப்

போய்ஒளிப்பது அல்லாது புலம்வேறு இன்றாம்;

ஞானாகா ரத்தினொடு ஞேயம் அற்ற

ஞாதுருவும் நழுவாமல் நழுவி நிற்கும்;

ஆனாலும் இதன்பெருமை எவர்க்குஆர் சொல்வார்?

அதுஆனால் அதுஆவர், அதுவே சொல்லும்.

ஆகார புவனம் – சிதம்பர ரகசியம் 22.

‘Other than the nature that is its own Self,

it allows nothing else to arise.

Because there is no other consciousness,

should anything attempt to arise there

it will, like a camphor flame, vanish.

The knower, devoid of both knowledge and objects known,

falls away, without falling, since it still remains.

But who can tell of its greatness, and to whom?

By dint of becoming That, one exists only as That.

That alone will speak for itself.’

‘Akarabuvanam-Chidambara Rahasya’ 22

அதுஎன்றால் எதுஎனஒன்று அடுக்கும் சங்கை;

ஆதலினால் அதுஎனலும் அறவேவிட்டு,

மதுஉண்ட வண்டுஎனவும் சனகன் ஆதி

மன்னவர்கள் சுகர்முதலோர் வாழ்ந்தார் என்றும்

பதிஇந்த நிலைஎனவும் என்னை ஆண்ட

படிக்கு, நிர் விகற்பத்தால் பரமா னந்தக்

கதிகண்டு கொள்ளவும்நின் அருள்கூர்; இந்தக்

கதிஅன்றி உறங்கேன்; மேல் கருமம் பாரேன்.

ஆகார புவனம் – சிதம்பர ரகசியம் 23

‘If we call it “That”, then the question will arise, “What is That?”

Therefore did Janaka and the other kings

and the rishis, foremost among whom is Suka,

lived happily, like bees intoxicated with honey,

entirely avoiding any mention of “That”.

Remain in this state.’17 Thus did he speak.

Grant me the abundance of your grace

so that, in the nirvikalpa state of total tranquillity,

I may know and attain the condition of supreme bliss,

in accordance with your rule.

I shall not sleep or take up any other work

until I attain this state.

‘Akarabuvanam-Chidambara Rahasya’-23.


Book References:

  • Talks with Sri Ramana Maharshi

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s