Sri Paramahamsarin Apta Mozi – 115

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 115

Apta mozi

[இங்கு உள்ள கட்டுரையின் தொடக்கம் முந்தைய பகுதியில் பதிவேற்றப்பட்டுள்ளது. எனவே சென்ற வாரத்தில் பதிவேற்றப்பட்ட பதிவை வாசித்த பின்பு இந்த வார தொடர்ச்சியை வாசிக்கவும்.]

முந்தைய பகுதி – மொழி 114: https://swamichidbhavananda.wordpress.com/2017/01/26/sri-paramahamsarin-apta-mozi-114/

க்ஷேத்திரத்தின் பயன்

பின்பு க்ஷேத்திரங்களால் ஒரு பயனும் உண்டானதில்லை என்று நாம் முடிவு கட்டலாகாது. பல தடவைகளில் ஆங்கு நமக்கு ஆனந்த பரவச நிலை வந்துவிடுவது உண்டு. நான் பிருந்தாவனத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு காளிங்க மர்த்தனம் நிகழ்ந்த இடத்துக்குப் போனேன். உடனே ஆனந்த பரவச நிலை உண்டாயிற்று. அதினின்று கீழ்நிலைக்கு இறங்கி வர என்னால் இயலாது போய்விட்டது. பேரானந்தத்திலே நான் திளைத்திருந்தேன். ஒரு பாலகனை நீராட்டுவது போன்று ஹிருதயர் என்னை நதிக்கு அழைத்துச் சென்று நீராட்டிக் கொண்டிருந்தார்.

சாயங்கால வேளைகளில் மைதானங்களிலிருந்து ஆடு மாடுகள் திரும்பி வரும். யமுனை நதிக்கரையோரம் அவைகள் வந்தபொழுதெல்லாம் எனக்கு ஆனந்த பரவச நிலை  மூண்டு எழும்பிவிட்டது. “கிருஷ்ணன் எங்கே? கிருஷ்ணன் எங்கே?” என்று ஓலமிட்டுக்கொண்டு ஒரு பைத்தியக்காரன் போன்று நான் அந்த ஆடு மாடுகளுக்கிடையே ஓடினேன். சியாமாகுளம், ராதாகுளம் இருக்கும் இடத்துக்கு நான் சென்றிருந்தேன். அக்குளங்களுக்கு அருகில் கோவர்த்தனக் குன்று இருக்கிறது. அதைப் பார்த்ததும் எனக்கு ஆனந்த பரவச நிலை வந்துவிட்டது. அவ்விடத்தை விட்டுத் திரும்பிவர என்னால் இயலாது போய்விட்டது. ஆங்கு குழுமியிருந்த மற்றவர்கள் என்னைத் தாங்கிப்பிடித்துக் கீழே அழைத்து வந்தார்கள். அவ்விடங்களைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தபொழுது என் உள்ளத்தில் உணர்ச்சி ஒன்று எழுவதாயிற்று. கண்ணனிடம் நான் பிரார்த்தித்தேன். “மேடும் மடுவும், மரமும் தரையும் எல்லாம் முன்பு இருந்தபடியே இப்பொழுதும் இருக்கின்றன. ஆனால் கண்ணா, உன்னை ஒருவனை மடும் நான் இங்கே காண இயலாதவனாக இருக்கிறேன். உன் காட்சியைக் காட்டி அருளலாகாதா?” என்று விண்ணப்பித்தேன்.

(தொடரும்…)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s