Sri Paramahamsarin Apta Mozi – 116

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 116

Apta mozi

(முந்தைய பகுதி – மொழி 115: https://swamichidbhavananda.wordpress.com/2017/02/02/sri-paramahamsarin-apta-mozi-115/ )

மாத்ரு பக்தி

ஆங்கு பிருந்தாவனத்தில் கங்காமாயி என்னும் பெயர் படைத்திருந்த பாட்டி ஒருத்தி இருந்தாள். அவள் ஆத்ம சாதனத்தில் முன்னேற்றம் அடைந்தவள். நான் அடைந்திருந்த பரவச நிலையையும், பாரமார்த்திக உணர்வையும் அவள் பெரிதும் பாராட்டினாள். ஸ்ரீமதி ராதை அடைந்திருந்த ஆனந்த பரவச நிலை எனக்கும் வந்திருந்ததென்று அவள் பாராட்டினாள். ஸ்ரீமதி ராதைக்குத் துலாலி என்பது மற்றொரு பெயர். என்னையும் துலாலி என்றே அப்பாட்டி அழைத்தாள். கங்காமாயி பாட்டியின் சகவாசம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த இடத்தைவிட்டுத் திரும்பி வர வேண்டுமென்கின்ற எண்ணம் எனக்குச் சிறிதும் உண்டாகவில்லை. தட்சிணேசுவரத்தைப் பற்றியும் நான் அப்பொழுது மறந்துவிட்டேன். சில வேளைகளில் ஹிருதயர் எனக்கு உணவு கொண்டு வந்து கொடுப்பார். வேறு சில வேளைகளில் கங்காமாயி பாட்டி தன் கைப்படச் சமைத்து எனக்கு அமுது பண்ணி வைப்பாள்.

நான் பிருந்தாவனத்திலேயே தங்கியிருப்பதற்கான ஏற்பாடுகள் எல்லாம் ஆய்விட்டன. ஆங்கு அமைந்திருந்த ஒரு குடிலின் ஒருமருங்கில் கங்காமாயி பாட்டி வசித்திருப்பாளென்றும், மற்றொரு மருங்கில் நான் வசித்திருப்பேன் என்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் ஹிருதயர் அதற்கு இடந்தரவில்லை. “இங்கு இருக்க வேண்டாம். கல்கத்தாவில் தட்சிணேசுவரத்துக்குத் திரும்பி வந்துவிடுங்கள்” என்று அவர் வற்புறுத்தினார். பிறகு என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போக அவர் ஆரம்பித்தார். அப்பொழுது கங்காமாயி பாட்டி என்னுடைய மற்றொரு கையைப் பிடித்து இன்னொரு பக்கம் இழுத்தாள். அவர்களுக்கிடையில் அகப்பட்டுக்கொண்ட நான் என்ன செய்வது என்று தெரியாது தத்தளித்தேன். உடனே மனதில் ஓர் எண்ணம் உதித்தது. என்னைப் பெற்றெடுத்த தாய் தமது வயோதிக நிலையில் தட்சிணேசுவரத்தில் நகபத்கானா என்னும் இடத்தில் வசித்திருந்தார். அவர் மருங்கில் நான் சென்றிருக்க வேண்டும் என்கிற எண்ணம் வந்தது.  பிருந்தாவனத்தில் தங்கியிருக்க இயலாது என்று கங்காமாயி பாட்டியிடம் உறுதியாகக் கூறிவிட்டேன். பிருந்தாவனத்தின் சூழ்நிலை எனக்கு மிகவும் பிடித்திருந்தது எனினும் அங்கே தங்கியிருக்க இயலாதவனாக நான் திரும்பி வந்துவிட்டேன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s