THE GARLAND OF PARAPARAM – 45

ஸ்ரீ தாயுமானவர் இயற்றிய

பராபரக்கண்ணி

photofunia-1475564811

கண்ணி 45:

இந்தநாள் சற்றும் இரங்கிலையேல் காலன் வரும்

அந்தநாள் காக்கவல்லார் ஆர்காண் பராபரமே.

விளக்கம்:

மானுட வாழ்க்கை ஒரு விதத்தில் கிளிப்பிள்ளையின் வாழ்க்கையை ஒத்திருக்கின்றது. கிளிப்பிள்ளைக்குச் ‘சிவசிவ’ என்றோ, ‘நாராயணா’ என்றோ பேசக் கற்பித்தால் அந்தச் சொல்லை அது அடுத்தடுத்து ஓதிக் கொண்டேயிருக்கிறது. ஆனால் அக்கிளியினைத் தாக்கப் பூனை ஒன்று பாய்ந்து வந்தால் அப்பறவையானது பரமனுடைய நாமத்தை மறந்துவிட்டுக் ‘கீச்கீச்’ என்று கத்தும். அதற்கு வேறு கதியில்லை. இறைவனுடைய அருளுக்குப் பாத்திரமாகாத மானுடன் பூஜை பண்ணுகிறான்; ஜபம் செய்கின்றான்; தவம் புரிகின்றான். ஆயினும் என்ன பயன்? காலன் என்னும் பூனை அவனைப் பிடிக்க வரும்பொழுது அவன் கடவுள் ஞாபகத்தை மறந்துவிடுகிறான். அவன் புரிந்த வினையே முன்னணியில் வந்து நிற்கிறது. கதறிப் பதறி மனிதன் மரண வேதனைப்படுவான். கடவுளின் எண்ணம் வராது. இறைவா! நான் இப்பொழுது உன் அருளிற்குப் பாத்திரமாகி விட்டேனாகில் காலன் வரும் நாள் என் நினைவிற்கு வாராது. அப்படி அவன் வரும்பொழுது உன் அருளே யாண்டும் என்நினைவில் நிலைத்து நிற்கும். ஆகையால், இன்றே இரங்கி என்னை ஆட்கொள்வாயாக என்று தாயுமானவர் பரிந்து விண்ணப்பிக்கிறார்.

-ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

The Garland of Paraparam

by

Sri Tayumana Swami

இந்தநாள் சற்றும் இரங்கிலையேல் காலன் வரும்

அந்தநாள் காக்கவல்லார் ஆர்காண் பராபரமே.

inthanAL saTRum irangilaiyEl kAlanvarum

anthanAL kAkkavallAr ArkAN parAparamE.

– கண்ணி 45

Hymn:

If now Thou pity me not,

Who then is to protect me

The day Death approacheth me?

Oh Para Param!

-‘Kaviyogi’ Suddhananda Bharathi

Translation:

Paraaparam, if you do not condenscend today who will save me on the day death will overtake me?

-Swami Chidbhavananda.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s