Sri Ramakrishna Jayanthi-2017-English/Tamil

(Scroll down to read in Tamil)

The Truly Educated

(Part – III)

-Swami Chidbhavananda

(Special article for the remembrance of Sri Ramakrishna Paramahamsa’s Birth Day 2017.)

Antithetic to National Ideals:

A few facts go to clarify the contrast between English education in England and that in India. Boys and girls in England were fostered with ideas that induced them to feel proud of their ancestors. But the Indian young ones were surreptitiously made to become ashamed of their ancestors.

The British youth was nurtured in the consciousness that his national culture was a growing all-absorbing force. The mind of the Indian graduate was vitiated into the belief that his national culture was all dreamy impotence.

The British children were brought up in the self-consciousness that they had the capacity to achieve anything and that they were born to rule the world. The feeling inculcated in the Indian youth was quite contrary to this. He was systematically trained in the conviction that whatever good he got in this world was a British boon and but for the British protection he would become forlorn in the world.

Every rising generation in England is made to subordinate personal interests to the good and the glory of England. But the educated here are out more to fleece the common man than to serve him. Entrust slaves with any power whatsoever and that power is unfortunately abused by the slaves. Knowledge is power; our Indian slaves abused that power.

Education for Selfishness:

Pick out a hundred people at any level in our society and put their civic consciousness to test; the difference between the modern educated and the so-called rustic will become patent. In a crowded railway compartment the modern educated ones usually refuse accommodation; the uneducated on the other had somehow willingly manage to share the sitting space with the newcomers. Our lawyers who are supposed to be the elite of society are woefully more intent on lining their pockets than on doing a good turn to their clients. Our doctors and engineers are no exception to this.

Gurudevar colour

The modern educated ones are classified in a way for what they are worth, by the Paramahamsa. The vulture soars high up in the sky. But its vision is ever intent on the carrion down below. The modern educated ones are no better than the vulture. They seemingly soar high in learning, but are woefully earth-bound, giving all selfish attention to pampering the body which is to become a carcass tomorrow. Their aspiration in life stops there. There is a great significance in the Paramahamsa’s refusing to have anything to do with such a soul-damning process. The significance becomes more pointed in that the Swami Vivekananda, his foremost disciple, drank it to the full and condemned it likewise for its emptiness.

It is but natural that with the coming of political freedom the attitude of the educated is undergoing a rapid change for the better. The inferiority complex in regard to their ancestry and their civilization is steadily vanishing. The slave complex is also becoming a thing of the past. This is all as it ought to be. The consciousness that one is a citizen of the land is getting pronounced. But a drawback that has got ingrained in us is unfortunately persisting.

(to be continued…)


கல்விமான்

(பகுதி-3)

-சுவாமி சித்பவானந்தர்.

(குருதேவரின் ஜெயந்தியையொட்டிய சிறப்புப் பகிர்வு 2017.)

சில புள்ளி விவரங்களின் மூலம் ஆங்கிலேயர்கள் வழங்கியுள்ள கல்வித் திட்டத்தின் குறைபாடுகளை ஆராய்வோம். இங்கிலாந்தில் கல்வி கற்ற சிறுவர்களும், சிறுமிகளும் தங்கள் முன்னோர்களைப் பற்றிப் பெருமை பாராட்டுதற்கான கருத்துக்களைப் பெற்று வந்தனர். ஆனால் இந்தியச் சிறுவர்கள் தங்களுடைய முன்னோர்களைப் பற்றி அவமானப்படும்படியான கருத்துக்களைப் பெற்று வந்தனர்.

தாங்கள் ஆங்கிலேயர்கள், உலகில் எதையும் சாதிக்கத் தங்களுக்கு இயலும் என்னும் சுய நம்பிக்கையை ஆங்கில இளைஞர்கள் பெற்று வந்தனர். அதற்கு நேர்மாறாக தங்களால் ஒன்றும் செய்து சாதிக்க முடியாது. ஆங்கிலேயர்களுடைய ஆதரவு இல்லாது போய்விட்டால் தங்கள் நாட்டின் வாழ்க்கையே அனர்த்தமாய்ப் போய்விடும் என்னும் புல்லிய எண்ணம் இந்தியச் சிறுவர்களுக்கு வழங்கப்பட்டது.

இங்கிலாந்தின் நலத்துக்காகவே தாங்கள் வளர்ந்து வருவதாகவும் இங்கிலாந்தின் முன்னேற்றத்தில் தங்களுடைய சொந்த நலன்கள் எல்லாம் அடங்கியிருக்கின்றனவென்றும் ஆங்கிலேய மாணாக்கர்கள் பாடம் கற்று வந்தார்கள். ஆனால் இந்தியச் சிறுவர்களுக்கோ தேச நலத்தைப் பற்றிய உணர்ச்சி ஊட்டப்படவில்லை. அது பெரிதும் மறுக்கப்பட்டது. கல்லூரிப் படிப்பை வெற்றிகரமாக முடித்தால்தன் தங்களுடைய சொந்த ஜீவனம் ஒழுங்காக நடைபெறும் என்று அவர்களுக்குப் போதிக்கப்பட்டது. இத்தகைய எதிர்மறை எண்ணங்களில் ஊறி வளர்ந்ததினால் இந்தியர்களுக்கு சுய நம்பிக்கையும், சுயப் பிரயத்தனமும், ஒற்றுமையும் இல்லாது போய்விட்டன.

அந்நிய அரசாங்கத்தின் கீழ் அடிமையாய் இருப்பவர்களுக்குச் சமுதாய ஒற்றுமையைப் பற்றிய உணர்வு வருவதில்லை. அவரவர் சொந்த வாழ்க்கையை ஏதேனும் ஒருவிதத்தில் சௌகரியமாக நடாத்திவிட்டால் வாழ்க்கையில் தாங்கள் பெற வேண்டியவைகளையெல்லாம் பெற்றாய்விட்டது என்று அவர்கள் உணர்கிறார்கள். இக்கோட்பாட்டை வேறொரு விதத்தில் பகருமிடத்து அந்நிய ஆட்சிக்கு அடிமைகளாக இருப்பவர்களுக்குச் சுயநல உணர்வு மனதை ஆழ்ந்து பற்றிப் பிடித்துக்கொள்கிறது. அத்தகைய சுயநலத்தை வளர்ப்பதற்கு ஆங்கிலேயர்கள் கொடுத்த கல்வித் திட்டம் பெரிதும் உதவி புரிந்தது. அதன் விளைவை இன்றைக்குக் காணலாம்.

சுயநலம்:

சமுதாயத்தில் உள்ள ஏதேனும் நூறு பேரை எடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்தால் நவீன கல்வியில் உயர்நிலைக்குப் போகின்றவர்களிடத்தே சுயநலப்பற்று மிகைப்பட்டிருப்பதைக் காணலாம். ரயில் வண்டிக்குள்ளிருக்கும் பிரயாணிகளுக்கிடையில் புதிதாக வண்டிக்குள் வருபவர்களுக்கு வசதி செய்து கொடுக்கும் மனப்பான்மை கற்றவர்களுக்கு அதிகமாய் வருவதில்லை. மற்றவர்களோ, பேரிடைஞ்சலுக்கிடையிலும் புதிதாக வருகிறவர்களுக்குச் சிறிது இடம் ஒதுக்கிக் கொடுப்பார்கள். நவீனக் கல்வி முறையில் வழக்கறிஞர்களாக வருபவர்களில் பெரும்பாலர் வழக்கைத் தொடுக்கும் பொதுமக்களுடைய நலத்தில் கருத்து வைப்பதில்லை. என்னென்ன வழிகளில் வழக்கை வளர்த்துக்கொண்டே போனால் தங்களுடைய வருவாய் இன்னும் அதிகரிக்கும் என்பதில் அவர்கள் கருத்துடையவர்களாயிருப்பார்கள். அதே மனப்பான்மையை டாக்டர்களுக்கிடையிலும், எஞ்ஜினீயர்களுக்கிடையிலும் காணலாம். பொதுமக்களுடைய நலத்துக்காகத் தாங்கள் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் மறந்துவிட்டுப் பொதுமக்களிடத்திருந்து என்னென்ன விதங்களில் பொருள் பறித்தெடுக்கலாம் என்பதிலேயே அல்லும் பகலும் அவர்கள் கருத்துடையவர்களாய் இருக்கிறார்கள். கற்றறிவாளர்களாகிய பள்ளிக்கூடத்து ஆசிரியர்களுக்கிடையிலும் இந்த மனப்பான்மை பெரிதும் புகுந்திருக்கிறது. அடிமை புத்தியில் ஊறியிருப்பவர்களுக்கிடையில் புகுந்துள்ள சர்வகலாசாலைப் படிப்பின் விளைவு இது ஆகும். இந்த சுயநலப் பற்றுக்கு விலக்காயிருப்பவர்கள் மிகச் சிலரேயாம்.

கல்வி பயின்றிருக்கின்றவர்களைக் குறித்து ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் தாக்கிப் பேசியிருக்கிறார். கழுகு வானத்தில் உயரப் பறக்கிறது. ஆனால் கீழே எங்கே அழுகிப்போன பிணம் கிடக்கிறது என்பதிலேயே அது கண்ணுங்கருத்துமாயிருக்கிறது. நவீனக் கல்விமான்கள் அந்தக் கழுகின் இயல்புடையவர்கள். கல்வியில் இவர்கள் உயரப் போகின்றனர். ஆனால் இவர்களுடைய கருத்துக்களெல்லாம் இனிச் சாகும் பிணங்களாகிய தங்களுடைய உடலங்களைப் பேணுதலிலேயே நின்றுவிடுகின்றன. நாடு ஒன்று அன்னியர் ஆட்சிக்கு அடிமைப்பட்டுவிடுவது பெரிய நஷ்டமல்ல. ஆனால் நாட்டு மக்கள் தங்களுடைய சீரிய மனப்பான்மையை இழந்து விடுவார்களானால் அது ஒப்பற்ற பெருநஷ்டமாகும். இதுகாறும் இந்திய மக்கள் மேல் நாட்டவர்கள் தந்துள்ள கல்வி முறையினின்று பெற்ற பயன் தங்கள் மனப்பான்மையைக் கீழ்ப்படுத்திக்கொண்டது ஒன்றேயாம். இத்தகைய கல்வி நமக்கு வேண்டாமென்று ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அதைப் புறக்கணித்ததில் பொருள் மிக உண்டு. அந்தக் கல்வியை முற்றிலும் பெற்றான பிறகு அதில் கேடுகள் என்னென்ன இருக்கின்றன என்பதை அவருடைய சிஷ்யராகிய விவேகானந்த சுவாமிகள் விளக்கிக் காட்டியதிலும் பொருள் மிக இருக்கிறது.

ஆங்கிலேயர்க்குப் பிறகு மக்கள் மனதில் உருவான முன்னேற்றம்:

நம் நாடு அரசியல் துறையில் சுதந்திரத்தைப் பெற்றான பிறகு கற்றவர்களுக்கிடையில் மனப்பான்மை ஓரளவு விரைவில் மாறியமைந்து வருகிறது. தங்களுடைய முன்னோர்களைக் குறித்தோ, தங்களுடைய நாகரீகத்தைக் குறித்தோ வெட்கப்படும் மனப்பான்மை இப்பொழுது விரைவில் மறைந்துவிட்டது. இந்த மாறுதலை முன்னேற்றம் என்றே மொழியலாம். அடிமைப் புத்தியும் அதிவிரைவில் மறைந்து வருகிறது. கல்வி கற்கும் ஒவ்வொருவனும் தான் நாட்டின் குடிமகன் என்கின்ற உணர்ச்சியை இப்பொழுது பெற்று வருகிறான். இத்தகைய உணர்ச்சியைப் பெற்று வருவதும் பாராட்டுதற்குரியதேயாம். மேல் நாட்டுக் கல்வியினின்று நமது மனதில் புகுந்துள்ள இரண்டு பெரிய குறைபாடுகள் நம்மை விட்டு இன்னும் அகன்றுபோனபாடில்லை. அது…

(நாளை…)

Leave a comment