THE GARLAND OF PARAPARAM – 47

ஸ்ரீ தாயுமானவர் இயற்றிய

பராபரக்கண்ணி

photofunia-1475564811

கண்ணி 47:

எள்அளவும் நின்னைவிட இல்லா எனைமயக்கில்

தள்ளுதலால் எனன்பலன் சாற்றாய் பராபரமே.

விளக்கம்:

  • சாற்றாய் – சொல்லாய்.

ஜீவாத்மனுக்கும் பரமாத்மனுக்குமிடையில் உள்ள தொடர்பு எத்தகையது என்பதை ஆத்ம சாதகன் அறிந்திருத்தல் வேண்டும். கடலிற்கு ஒப்பானவர் பரமாத்மா. அதில் சதா உருவெடுக்கும் அலைகளுக்கு ஒப்பானவைகள் ஜீவாத்மாக்கள். கடலைவிட்டுக் கணப்பொழுதும் அலை பிரிந்திருக்க முடியாது. கடலிற்கும் அலைக்கும் உள்ள இணக்கம் போன்றது பரமாத்மனுக்கும் ஜீவாத்மனுக்கும் இடையில் உள்ள இணக்கம். எள்ளளவாவது பிரிந்திருப்பது உபமானம் உபமேயம் ஆகிய இரண்டிலும் சாத்தியமன்று. கடலும் அலையும் உபமானம்; பரமாத்மனும் ஜீவாத்மனும் உபமேயம். இதுதான் உண்மையென்றால் ஜீவாத்மன் பரமாத்மனிடமிருந்து தள்ளப்படலாகாது என்ற பிரார்த்தனை எதற்காகப் பிறக்க வேண்டும்? பிரியாதிருக்கிற இரண்டு பொருள்களைக் குறித்து இங்ஙனம் பிரார்த்தனை பண்ணுவது பொருளற்றதாகத் தென்படுகிறது. ஆனால் ஜீவாத்மனுக்கு எப்படியோ மயக்கம் வருகிறது. பத்திரமாகப் படுக்கையில் படுத்துறங்குபவன் காட்டில் கரடியின் கையில் அகப்பட்டுக் கொண்டதாகக் கனவு காண்கின்றான். அந்நிலையில் அவன் கதறிப் பதறி அழுவது இயல்பு. அத்தகைய மயக்கத்தில் ஜீவாத்மன் தள்ளுண்டு கிடக்கிறான். மயக்கத்தில் இருக்கிறபொழுது அவன் பிரார்த்தனை பண்ணாதிருக்க முடியாது. அந்த மயக்கத்தை அகற்றி வைக்க வேண்டுமென தாயுமானவர் விண்ணப்பிக்கின்றார். இறைவா! மயக்கத்தில் உன்னிடமிருந்து பிரிவுபட்டவனாகக் கருதிப் பதை பதைக்கின்ற என்னை அந்த மயக்கத்தில் தள்ளாதிருப்பாயாக என்பது பிரார்த்தனை.

-ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.


The Garland of Paraparam

by

Sri Tayumana Swami

எள்அளவும் நின்னைவிட இல்லா எனைமயக்கில்

தள்ளுதலால் எனன்பலன் சாற்றாய் பராபரமே.

eL aLavum ninnaivida illA enaimayakkil

thaLLuthalAl enanpalan sATRAi parAparamE.

Hymn:

What availeth Thee

That Thou should push me

Into delusive birth again –

Me who leaveth Thee not

Even for a little while?

Oh Para Param!

-‘Kaviyogi’ Suddhananda Bharathi

Translation:

Gracious Paraaparam, please tell what is the profit in deluding and rejecting me who am utterly helpless without you?

-Swami Chidbhavananda.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s