Sri Paramahamsarin Apta Mozi – 119

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 119

Apta mozi

முந்தைய பகுதி – மொழி 118: https://swamichidbhavananda.wordpress.com/2017/02/23/sri-paramahamsarin-apta-mozi-118/

சித்தமலம் அறுக்கும் சிவன்

தோட்டி ஒருவன் ஒரு தொட்டி நிறைய மலத்தைத் தன் தலைமீது தூக்கிக்கொண்டு போகின்றான். தினந்தோறும் அவன் அதைச் செய்வதால் அது அசுசியானது என்கின்ற எண்ணம் அவனை விட்டுப் போய்விடுகிறது. ஆனால் அதை அசுசியானது என்று உலகத்தவர் எண்ணுகின்றனர். அவர்கள் எண்ணுவது போன்று மலம் அவ்வளவு அசுசியானதல்ல. உயிர் வாழ்க்கையின் விளைவாக அது உண்டாகிறது. அதைச் சுத்தம் செய்கின்ற தோட்டி ஒருவிதத்தில் சிவபெருமானுடைய செயலைச் செய்கின்றான். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தார்கள். அதில் அகப்பட்ட நல்ல பொருள்களையெல்லாம் அவர்கள் பங்கு போட்டுக்கொண்டார்கள். பங்குக்குச் சிவபெருமான் ஒருவர் மட்டும் போகவில்லை. பாற்கடலைக் கடைந்ததின் விளைவு மற்றொன்று உண்டாயிற்று. விஷம் தோன்றியது. அதைத் தேவர்களோ, அசுரர்களோ பங்குபோட முன்வரவில்லை; அதைவிட்டு விலகி ஓட முயன்றார்கள். சிவபெருமான் அவ்விஷத்தை உண்டு உலகைக் காப்பாற்றினார். வாழ்வு என்னும் பாற்கடலைக் கடைவதினின்று வரும் விஷம் மலம். தோட்டி அதைச் சுத்தம் பண்ணாவிட்டால் சமூக வாழ்வே அலங்கோலமாய்ப் போய்விடும். அதைவிடப் பெண் ஆசையும், பொன் ஆசையும் அசுசியானவைகள். சர்வகாலமும் இந்த ஆசையிலேயே உழன்று கொண்டிருப்பவர்களுக்கு அதன் கீழ்மை புலப்படுவதில்லை.

*                                                         *                                                         *                              கடவுளுடைய் திருநாமத்தை இடையறாது ஓதிக் கொண்டிருக்க வேண்டும். அவருடைய மகிமைகளைக் குறித்துப் புகழ்ந்து பாட வேண்டும். இப்படிச் செய்வதால் கடவுள் பக்தி மேன்மேலும் வளர்கிறது.

முன்னேற்றத்துக்கு இடைஞ்சல்கள்

திரும்பவும் மஹேந்திரரைப் பார்த்துப் பரமஹம்ஸர் மற்றொரு கருத்தை வெளியிட்டார்: “இறைவனுடைய திருநாமத்தை ஓதுதலில் யாருக்கும் சங்கோசம் உண்டாகலாகாது. அவருடைய நாமத்தை ஓதுதலில் அன்பு அதிகரிக்கின்றபொழுது அதைப் பற்றிய வெட்கம் தானாக விலகிவிடுகிறது. மனிதனுடைய முன்னேற்றத்துக்கு இடைஞ்சலாக மூன்றுவிதமான நிலைகள் இருக்கின்றன. யாரிடத்தில் பயமும், வெட்கமும், கோபமும் இருக்கின்றனவோ அம்மனிதன் ஒருபொழுதும் முன்னேற்றம் அடைய முடியாது.

கமார்ப்புகூரில் பக்தி ததும்புகின்ற சங்கீர்த்தனங்கள் பாடுகிறவர்கள் இருக்கிறார்கள். தாளம், தம்புரா, மிருதங்கம் ஆகிய இன்னிசைக் கருவிகளின் துணைகொண்டு அவர்கள் அற்புதமாகப் பாடுகின்றனர்.

பலராமரைப் பார்த்துப் பரமஹம்ஸர் கேள்வி ஒன்று கேட்டார்: “பிருந்தாவனத்திலே உங்களுடைய குடும்பத்தார் ஆலயம் கட்டுவித்து மூர்த்திப் பிரதிஷ்டை ஏதாவது செய்திருக்கின்றார்களா?”

பலராமர்: ஆம் தேவே! நந்தவனம் ஒன்று அமைத்து அதனுள் ராதாகிருஷ்ணனுடைய ஆலயம் சிறியதாக ஒன்று கட்டுவித்து வைத்திருக்கிறோம். ஆங்கு அனுதினமும் வழிபாடு நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

பரமஹம்ஸர்: நான் பிருந்தாவனத்துக்குச் சென்றிருக்கின்றேன். அந்த க்ஷேத்திரத்தின்கண் இருக்கின்ற நிதுவனம் மிக அழகானது. அந்த க்ஷேத்திரம் அருளுக்கு உறைவிடம்.

(தொடரும்…)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s