Question & Answer – 42

ஐயம் தெளிதல்

தத்துவ விசாரம்

கேள்வி எண் 42: உலகில் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று இரு தரத்தாரை இறைவன் ஏன் சிருஷ்டித்தார்? அவர் எல்லாரையும் நல்லாராகப் படைத்திருந்தால் உலகம் மேன்மையுற்று விளங்கும் அல்லவா?

பதில்: முக்குண மயமாயுள்ளது சிருஷ்டி. முக்குணங்களுக்கு இடையிலுள்ள தார தம்மியத்தால் படைப்பு நிகழ்கிறது. ஸத்வம், ரஜஸ், தமஸாகிய மூன்று குணங்கள் ஐக்கிய நிலையை எய்துங்கால் பிரளயம் வந்துவிடும். சிருஷ்டியில் பேதம் நிகழ்கிறது. பிரளயமோ அபேத நிலை. எங்கு சிருஷ்டி இருக்கிறதோ அங்கு நாம் பேதத்தைக் காண்கிறோம். குயவன் களிமண்ணைக் கொண்டு ஒரே விதமான பாண்ட்த்தை வரைவானாகில் அது அவனுடைய சிருஷ்டி திறமையாகாது. இறைவன் மக்கள் எல்லாரையும் ஒரே பாங்கில் படைத்துவிடுவாராகில் அபிப்பிராய பேதம் இல்லை, வாழ்க்கை பேதம் இல்லை. அந்நிலை மரணத்துக்கு ஒப்பானது. நாம் விழித்திருக்கிற வேளையில் நல்லவர்களையும் சந்திக்கிறோம்; கெட்டவர்களையும் சந்திக்கிறோம். நல்லவர்களிடத்து ஒரு பாங்கில் நடந்து கொள்கிறோம். கெட்டவர்களிடத்து இன்னொரு பாங்கில் நடந்து கொள்கிறோம். யாரிடத்து  என்ன பாங்கில் நடந்து கொள்ளுதல் என்பது வாழ்க்கைப் பயிற்சியாகிறது. எல்லாரிடத்திலும் ஒரே பாங்கில் நடந்துகொள்ளுகிற அபேத அமைப்பு உலகில் ஏற்படுங்கால் அது பயிற்சி பெறுவதற்கான சூழ்நிலையாகாது. முன்னேற்றமடைவதற்கு வாய்ப்பு இல்லாது போய்விடும். நல்லாரோடு நல்லிணக்கம் பூணுவது ஒருவிதப் பயிற்சி. பொல்லாரைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பது மற்றொரு விதமான பயிற்சி. கடலில் கொந்தளிப்பே இல்லாது இருக்குமானால் மாலுமி தன்னுடைய திறமையை வளர்ப்பதற்குச் சந்தர்ப்பமில்லை. இடையிடையே கடல் கொந்தளிப்பு ஏற்படுமானால் அந்தப் பிரதிகூலமான சூழ்நிலையில் கப்பலைச் செலுத்துவதின் வாயிலாக மாலுமியின் திறமை ஓங்குகிறது. வாழ்வு என்னும் பயணமும் அத்தகையதே. பலதரப்பட்ட மாந்தர்களோடு மனிதன் தொடர்பு வைத்துப் பழக வேண்டும். மனிதன் துஷ்டனாயிருப்பது அவனுடைய வாழ்க்கையில் ஒரு படித்தரமாகிறது. துஷ்டனாயிருப்பதின் வாயிலாகத் துஷ்டத்தனத்தை  அவன் நன்கு அறிபவனாகிறான். ஆதலால் துஷ்டத்தனத்தில் கொஞ்சநாள் ஈடுபட்டிருப்பது வாழ்க்கையின் போக்கு ஆகிறது. துஷ்டனை நல்லான் ஒருவன் சமாளித்துப் பழகுகிறான். சமாளிப்பில் அவன் சமர்த்தன் ஆவதற்குத் துஷ்டன் அவனுக்கு நல்ல சந்தர்ப்பத்தைக் கொடுக்கிறான். ஆதலால் உலக அமைப்பில் நல்லார் பொல்லார் ஆகிய இருதரத்தாரும் அவசியமாகின்றனர். இருதரத்தாருடைய செயல்கள் வாழ்க்கையைப் பண்படுத்துவதற்கு உதவுகின்றன. ஆக, அப்பொழுது உள்ள ஏற்பாடே உயர்ந்தது.

தெளிவித்தவர்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s