THE GARLAND OF PARAPARAM – 48

ஸ்ரீ தாயுமானவர் இயற்றிய

பராபரக்கண்ணி

photofunia-1475564811

கண்ணி 48:

பாடிப் படித்துஉலகில் பாராட்டி நிற்பதற்கோ

தேடி எனைஅடிமை சேர்த்தாய் பராபரமே.

விளக்கம்:

பேரரசன் ஒருவன் உலகில் இருக்கிறான். அவனோடு மனைவி மக்கள் எல்லாரும் வேண்டும்பொழுதெல்லாம் வேண்டியவாரெல்லாம் இணக்கம் வைக்கின்றனர். இனி மந்திரி பிரதானி முதலிய உத்தியோகஸ்தர்கள் குறிப்பிட்ட வேலையில் அலுவலுக்கேற்றவாறு அந்த அரசனோடு இணக்கம் வைக்கின்றனர். ஆனால் அரண்மனைக்கு வெளியே வாயில் காப்பாளர்களாக இருப்பவர்கள் அரசனைப் பார்ப்பதுமில்லை; அரசனோடு இணக்கம் கொள்ளுவதுமில்லை. ஆனால் அரசனுடைய பெருமைகளை அவர்கள் பறைபடிப்பதுண்டு. பக்தன் ஒருவன் அந்நிலையில் வைக்கப்படுவானாகில் அது பரிதாபகரமானது. கடவுளைக் குறித்துத் தாளம் ராகம் பிசகாது பாடினால் போதாது. கடவுளைக் குறித்து நூல்கள் பல படித்து நுட்பங்கள் பலவற்றை எடுத்துப் பேசினால் போதாது. பாடல் திறனிலும் பாண்டித்தியத்திலும் உறுதி பெற்றவர்கள் பலர் பரமனைக் குறித்துக் கசிந்துருகிப் பாடவும், வல்லுனர்களாக விளக்கங்கள் பல கொடுக்கவும் செய்கின்றனர். அத்தகைய வாய்ப்பேச்சுக் கூட்டத்தில் இறைவா என்னைச் சேர்த்து வைக்க வேண்டாம். உன்னுடைய அருளிற்கு நேராகப் பாத்திரமானவர்களின் கூட்டத்தில் என்னைச் சேர்த்து வைக்க வேண்டும் என்பது இப்பிரார்த்தனையின் பாங்கு ஆகும்.

-ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.


The Garland of Paraparam

by

Sri Tayumana Swami

பாடிப் படித்துஉலகில் பாராட்டி நிற்பதற்கோ

தேடி எனைஅடிமை சேர்த்தாய் பராபரமே.

pAdip padiththu ulagil pArAtti niRpathaRkO

thEdi enaiadimai sErththAy parAparamE.

HYMN:

Is it to sing and dance

And stand in the way of the world

Thou sought me

And took me into Thine fold?

Oh Para Param!

-‘Kaviyogi’ Suddhananda Bharathi.

TRANSLATION:

Merciful Paraaparam, have you searched and selected me as your slaves, just only to sing and read, extolling you?

-Swami Chidbhavananda

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s