Question & Answer – 44

ஐயம் தெளிதல்

தத்துவ விசாரம்

கேள்வி எண் 44: நல்லவரும், கெட்டவரும் மரணத்தின் வாயிலாகத் துடைக்கப்படுவது திண்ணம். இந்நிலையில் சிலர் நல்லவராயிருந்து அடைந்த பயன் என்ன?

பதில்: இக்கேள்விக்கு விடையாக மற்றும் சிலர் கெட்டவர்களாயிருந்து அடையும் பயன் என்ன என்று நாம் கேட்கலாம். ஸ்தாவர உலகில் சுவை நிறைந்த நல்ல கனிகளைத் தரும் மரம், செடி, கொடிகளிருக்கின்றன. பயன்படாத கனிவகைகளைத் தருகிற மரம், செடி, கொடி வகைகளும் இருக்கின்றன. புசித்தால் மனிதன் மாண்டு போவதற்கான நச்சுப் பழங்களைத் தரும் ஸ்தாவரங்களும் இருக்கின்றன. மனிதன் மட்டுமன்று உயிர் வகைகள் யாவும் நல்லவைகளையே நாடுகின்றன. கெட்டவைகளை ஒதுக்கித் தள்ளுகின்றன. வாழ்க்கைக்குப் பயன்படுபவைகள் நல்லவை. இடைஞ்சல் பண்ணுபவைகள் கெட்டவை. இயற்கையின் அமைப்புக்கேற்ப மக்களுள்ளும் நல்லவர்களிருக்கிறார்கள், கெட்டவர்களிருக்கிறார்கள். கெட்டவர்கள் சமுதாயத்திற்குக் கேடு விளைவித்துக்கொண்டே இருக்கின்றனர். நலம் புரிகிறவர்களுக்கு இடையிலுள்ள நிம்மதி கேடு புரிகிறவர்களுக்கு இடையில் இல்லை. நன்மையே செய்வதின் மூலம் மனிதனுடைய ஆனந்தம் மேலும் மேலும் உறுதி பெறுகிறது. கேடு செய்கிறவனுடைய மட்டமான மனப்பான்மை தனக்கும் தொல்லையை உண்டு பண்ணுகிறது. மற்றவர்களுக்கும் தொல்லையை உண்டுபண்ணுகிறது. நல்லாரும் பொல்லாரும் அழிந்துபட்டுப் போவது திண்ணம் என்றால் நிலையற்ற வாழ்வை நலம் புரிவதில் பயன்படுத்துகிறவர்கள் உலகத்திலுள்ள துன்பங்களைக் குறைக்கின்றனர். கெட்டவர்களோ துன்பங்களை வளர்க்கின்றனர். அதன் மூலம் அவர்கள் முன்னேற்றம் அடைவதில்லை. உலகுக்குத் தான் வழங்குகின்ற இன்பத்தை முன்னிட்டும் தனக்குத் தானே உண்டு பண்ணிக்கொள்கிற நலனையும் மேன்மையையும் முன்னிட்டு ஒவ்வொரு மனிதனும் நல்லவனாகவிருக்க முயலுவதே முறை.

தெளிவித்தவர்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s