Question & Answer – 45

ஐயம் தெளிதல்

தத்துவ விசாரம்

கேள்வி எண் 45: இயற்கை மரணமும் அகால மரணமும் ஒரே ஆண்டவனின் கட்டளையா? அவை தனித்தனி என்றால் எப்படி?

பதில்: இயற்கை நடைமுறை முழுதும் ஒன்று சேர்ந்து ஆண்டவனுடைய கட்டளையாகிறது. அந்நிகழ்ச்சிகளுள் சில பொருந்தியவைகளாகவும், வேறு சில பொருந்தாதவைகளாகவும் நமக்குத் தென்படுகின்றன. ஆயினும் பொருந்தியவை, பொருந்தாதவை ஆகிய எல்லா நிகழ்ச்சிகளும் இயற்கையின்கண் நிகழ்ந்து வருகின்றன. அவைகளுள் உயிர்களின் முன்னேற்றத்துக்குப் பொருந்தியவைகளையே நாம் இறைவனுடைய கட்டளை எனக்கொள்ளுதல் வேண்டும். அதற்கேற்றபடி நாம் முரண்பாடில்லாமல் நடந்துகொள்வது நம் கடமையாகிறது. அவ்வாறு நடந்துகொள்வதன் மூலம் நாம் பரிணாமத்தில் மேல்நிலைக்கு வருகிறோம். பொருந்தாதவைகள் நிகழ்கின்றவிடத்து அவைகள் வாயிலாகவும் நாம் பாடமொன்றைக் கற்றுக் கொள்கிறோம். எச்செயல்கள் மனிதனைக் கீழ்மைப் படுத்துகின்றனவோ அவை யாவும் இயற்கையினது திட்டத்திற்குப் பொருந்தாதவைகளேயாம். ஆயினும் அவைகளை அறவே தடுக்க யாருக்கும் இயலாது. பொருந்தியவைகள், பொருந்தாதவைகள் யாவும் நடைபெறுதற்கு இயற்கையில் இடம் உண்டு. அகால மரணம் பொருந்தாது என்றாலும் அது இயற்கையில் நிகழ்கிறது. நடக்கக் கற்றுக்கொள்ளும் குழந்தை ஒன்று பலமுறை தடுக்கிக் கீழே விழுவது இயல்பு. அதற்கு நிகரானது அகால மரணம். ஆயினும் அதன் வாயிலாகவும் அம்மரணத்துக்கு உட்படும் ஜீவன் கற்க வேண்டியவைகளைக் கற்றுக் கொள்கிறான். ஆகவே இயற்கையில் நிகழவேண்டிய அனைத்தையும் தொகுத்துப் பொதுவாக இறைவனுடைய கட்டளையென்று நாம் வைத்துக் கொள்ளலாம். மேலும், அந்நியதிக்குக் கட்டுப்பட்டு முறை பிறழாமல் செயல்பட வேண்டிய இன்றியமையாமையும் நமக்குண்டு. அதற்கிடையில் மனிதனுடைய முன்னேற்றத்திற்குச் செயல்கள் அனைத்தும் பயன்பட்டு வருகின்றன என்பதை அறிந்து கொள்கின்றவன் நல்ல ஆத்ம சாதகனாகின்றான். அன்னவனுக்கு அகால மரணமும் நல்லதொரு பாடத்தைப் புகட்டுகிறது. அதாவது பொருந்திய செயல் பொருந்தாத செயல் மயமாயிருக்கும் பிரபஞ்சத்தைத் தாண்டி அப்பால் செல்லுதற்கு மனிதன் அவை யாவையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவே தீவிரமான ஆத்ம சாதகன் ஒருவன் யுக்தி பூர்வமாக மேற்கொண்டு ஒழுக வேண்டிய நடைமுறை ஆகும்.

தெளிவித்தவர்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s