Question & Answer – 46

ஐயம் தெளிதல்

தத்துவ விசாரம்

கேள்வி எண் 46: அகால மரணம் அடைந்தோர் நிலை என்ன?

பதில்: மானுடன் ஒருவன் தன்னுடைய பிராரப்த கர்மத்துக்கேற்ப உலகில் வாழ்ந்து வருகிறான். பிராரப்த கர்மம் ஓய்வு அடையும்பொழுது அவனுடைய உடல் வாழ்வும் முடிவுறுகிறது. பிராரப்த கர்மப்படி ஒருவனுடைய உடல் வாழ்க்கை ஐம்பது வருஷங்களுக்குத் தொடர்ந்து நடைபெற்று வருமென்றால் அதற்கு முன்பே ஏதேனும் ஒரு விபத்துக்கு ஆளாகி அம்மனிதன் மடிந்து போவானாகில் அது அகால மரணம் எனப்படுகிறது. இதைச் சான்று ஒன்றன் மூலம் விளக்குவோம். பம்பரம் ஒன்றைச் சிறுவன் ஒருவன் சுழற்றுகின்றான். அது அவன் கொடுத்த பிராரப்த கர்மத்திற்கு நிகர். பம்பரம் சுழன்று கொண்டிருக்கிறபொழுது மற்றொரு சிறுவன் அதைக் கையில் பிடித்துச் சுழலவொட்டாது தடைப் படுத்துகிறான். அது போன்றது அகால மரணம்.

எதிரியின் கையில் கொலையுண்பது, நீந்தத் தெரியாது நீரில் வீழ்ந்து திணறிச் சாவது, வண்டி விபத்தில் மடிவது ஆகியவைகளை அகால மரணங்கள் எனலாம். அகால மரணத்தை அமைதியாக எற்றுக் கொள்பவர்களுக்கு அதனால் இடைஞ்சல் ஒன்றுமில்லை. அது சாதாரணமாக இயற்கை எய்துவதற்கு நிகராகிறது. மற்று, தன்னைக் கொல்ல வந்த எதிரியோடு கோபாவேசம் பூண்டோ, அல்லது பயந்து கொண்டோ சாகிற ஒருவனுக்கு யாதனா சரீரம் என்னும் நிலையில் கொஞ்ச காலத்துக்குச் சஞ்சலம் உண்டு. பிறகு அந்த அசாதாரண நிலையிலிருந்து தெளிவடைந்தவனாய்த் தோன்றா நிலைக்குப் போகிறான். இதுவே அகால மரணத்தைப் பற்றிய கோட்பாடு ஆகும்.

தெளிவித்தவர்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s