Category Archives: Sri Tayumanavar

THE GARLAND OF PARAPARAM – 54

ஸ்ரீ தாயுமானவர் இயற்றிய

பராபரக்கண்ணி

photofunia-1475564811

கண்ணி 53:

கொல்லா விரதம் குவலயம்எல்லாம் ஓங்க

எல்லார்க்கும் சொல்லுவதுஎன் இச்சை பராபரமே.

விளக்கம்:

  • குவலயம் – உலகம்.

விரதங்களுள் சிறந்தது கொல்லா விரதம். இவ்விரதத்தை உலக நடைமுறையோடு சீர்தூக்கிப் பார்க்குமிடத்து வாழ்வில் பெரிய முரண்பாடு ஒன்றைக் காண்போம். மண்ணிலுள்ள பேக்டீரியா என்னும் அணுவுயிரைத் தின்று புல் பூண்டுகள் பயிர் பச்சைகள் உயிர் வாழ்கின்றன. அவைகளைத் தின்று மான் முதலியன உயிர் வாழ்கின்றன. மானைத் தின்று சிங்கம் புலி முதலியன உயிர் வாழ்கின்றன. பூச்சியைத் தின்று பல்லி உயிர் வாழ்கிறது. பல்லியைத் தின்று கோழி உயிர் வாழ்கிறது. கோழியைத் தின்று பருந்தும் மனிதனும் உயிர் வாழ்கின்றனர். இங்ஙனம் வாழ்வென்பது உயிரை உயிர் மாய்ப்பதின் வாயிலாக அமைந்துள்ளது. இத்தகைய நெருக்கடியான திட்டத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கிற மனிதன் எங்ஙனம் கொல்லா விரத்தைக் கடைப்பிடிக்க முடியும்? கொல்லா விரதம் மனிதனுக்கே சாலும் என்பது சான்றோர் துணிபு. எல்லா உயிர்களிடத்தும் அன்பாயிருக்க மனிதனுக்கு இயலும். எவ்வுயிர்க்கும் மனம் மொழி மெய்யால் தீங்கு செய்யாதிருக்க மனிதனுக்கு இயலும். தான் உணவுண்பதையே தனது சுக ஜீவனத்துக்காகவென்று கருதாது ஈஸ்வர ஆராதனைக்கென்று கருதி உண்பவன் அச்செயலிலுள்ள தோஷத்தினின்று விடுபடுகிறான். தான் உயிர் வாழ்ந்திருப்பது தனக்காகவன்று. கடவுள் வழிபாட்டிற்கே தன் உயிர் வாழ்வு அமைந்திருக்கிறது. இடையறாது கடவுல் வழிபாடு செய்வதற்கிடையில் தன்னுடைய ஜீவ வியக்தியைச் செத்ததற்கு நிகராக ஒதுக்கி வைக்க வல்லவன் கொல்லா விரதத்தில் நிலைபெற்றவனாகிறான். அஹிம்சையிலே நன்கு நிலைபெற்றிருக்கும் யோகி ஒருவனுடைய முன்னிலையில் ஏனைய உயிர்களும் பகைமையை ஒழித்துவிடுகின்றன என்பது கோட்பாடு. ஆக, ஆழ்ந்து கடவுள் பக்தியில் ஈடுபட்டிருப்பவர்களெல்லாம் கொல்லா விரதியர் ஆகின்றனர். அவர்களின் எண்ணிக்கை உலகெங்கும் அதிகரிக்க வேண்டும் என்பது அடியேனது பிரார்த்தனை என்கிறார் தாயுமானவர்.

-ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.


The Garland of Paraparam

by

Sri Tayumana Swami

கொல்லா விரதம் குவலயம்எல்லாம் ஓங்க

எல்லார்க்கும் சொல்லுவதுஎன் இச்சை பராபரமே.

kollA viratham kuvalayam yellAm Onga

ellArkkum solluvathu en ichchai parAparamE.

-கண்ணி 53

HYMN:

To proclaim aloud to one and all,

All the world over

The penance of non killing

Is my desire intense,

Oh Para Param!

-‘Kaviyogi’ Suddhananda Bharathi.

TRANSLATION:

Paraaparam, it is my desire to declare to the world at large the merit of the vow of non-injury.

-Swami Chidbhavananda.

Advertisements

THE GARLAND OF PARAPARAM – 53

ஸ்ரீ தாயுமானவர் இயற்றிய

பராபரக்கண்ணி

photofunia-1475564811

கண்ணி 53:

கண்ஆவா ரேனும்உனைக் கைகுவியார் ஆயின்அந்த

மண்ஆவார் நட்பை மதியேன் பராபரமே.

விளக்கம்:

இந்திரியங்களுள் சிறந்ததான கண்ணிற்கு ஒப்பான நண்பர்கள் உலகில் உண்டு. அவர்கள் எல்லாக் காரியங்களுக்கும் உதவும் தன்மையுடையவர்கள் ஆவார்கள். அத்தகைய முதன்மை வகிப்பவர்களாக இருந்தாலும் அன்னவர்களிடம் கடவுள் பக்தி இல்லாவிடில் அவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்களாவார்கள். வீணில் பிறந்து வாழ்ந்திருந்து மண்ணில் புதையுண்டு மறைந்து போகின்றனர். கடவுள் பக்தியில்லாத அம்மனிதர்களின் உறவுக்கு நான் மதிப்பு ஒன்றும் தரமாட்டேன். இறைவா! உன்னை நான் நேசிப்பது போன்று உன்னைக் கைக்குவித்து வணங்குகின்ற பக்தர்களையே நேசிப்பேன். மற்றவர்களைப் பொருள்படுத்தமாட்டேன் என அண்ணல் இயம்புகின்றார்.

-ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.


THE GARLAND OF PARAPARAM

By

Sri Tayumana Swami

கண்ஆவா ரேனும்உனைக் கைகுவியார் ஆயின்அந்த

மண்ஆவார் நட்பை மதியேன் பராபரமே.

kaNAvA rEnumunaik kaikuvivAr Ayinantha

maNAvAr natpai mathiyEn parAparamE.

-கண்ணி 53

HYMN:

Precious be they as the apple of the eye.

If they adore Thee not with folded hands,

Unto dust art they,

And their company I cherish not,

Oh Para Param!

-‘Kaviyogi’ Suddhananda Bharathi.

TRANSLATION:

O Paraaparam, there may be people as indispensable as eyes. Still if they are not your devotees I care not for their friendship who are heading for destruction.

-Swami Chidbhavananda.