Category Archives: Swami Chidbhavananda

Rare Photographs in Vedantam thanda Veera Thuravi Swami Chidbhavananda books

அன்பார்ந்த வாசகர்களே,

வேதாந்தம் தந்த வீரத் துறவி சுவாமி சித்பவானந்தர் நூலைப் பற்றி வாசகர்களாகிய உங்களுக்கு அறிமுகம் செய்வித்து, புத்தகத்தைப் பற்றிய விமர்சனமும் வழங்கியிருந்தோம். அவை:

https://swamichidbhavananda.wordpress.com/2018/04/23/vedantam-thanda-veera-thuravi-swami-chidbhavananda-tamil-book/

https://swamichidbhavananda.wordpress.com/2018/04/26/a-review-vedantam-thanda-veera-thuravi-swami-chidbhavananda-book/

இந்த புத்தகங்களில் உள்ள மற்றொரு அம்சத்தைப் பற்றி பேசலாம் என்று இருக்கிறோம். அந்த மற்றொரு அம்சம் ‘அரிய புகைப்படங்கள்’. அரிய பல புகைப்படங்கள் புத்தகம் முழுவதும் நிரம்பியுள்ளன. 3 பாகங்களில் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் புகைப்படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றை இங்கு காட்சிப்படுத்துவது புத்தகம் வாசிப்போரின் ஆர்வத்தை குறைத்துவிடும் என்பதால் அரிய புகைப்படங்கள் எவை என்று மட்டும் சுட்டிக்காட்டுகிறோம்.

பெரிய சுவாமிஜியின் புகைப்படங்கள் பெரும்பாலும் இணையதளங்களில் “தேடுதல்” செய்யும்பொழுது கிடைக்கின்றன. இன்னும் பல புகைப்படங்கள் தபோவனத்தின் விழா மலர்களில் கிடைக்கின்றன. அவை பெரும்பாலும் அவரது வாழ்வின் பிற்காலத்தில் எடுத்த புகைப்படங்களாக இருக்கின்றன. ஆனால் சுவாமிஜியின் இளமைக்கால புகைப்படங்கள் கிடைப்பது அரிது. அத்தகைய அரிய புகைப்படங்கள் இந்நூலில் காணக் கிடைக்கின்றன.

ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தில் பெரிய சுவாமிஜி அறையில் அவரது இளமைக்கால புகைப்படங்கள், கையெழுத்துப் பிரதிகள், அவர் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். தபோவனத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் பெரும்பான்மை இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

பெரிய சுவாமிஜியின் தாய் தந்தையரான நஞ்சம்மை, பெரியண்ண கவுண்டர் ஆகியோரின் புகைப்படங்களை இதற்கு முன்பு பல முறை வாசகர்கள் பார்த்திருக்கக் கூடும். மற்றொரு அரிய புகைப்படத் தொகுப்பு எதுவென்றால் அது பெரிய சுவாமிஜியின் மூதாதையர் ஒருவரின் புகைப்படமும், சுவாமிஜி பிறந்து வளர்ந்த செங்குட்டைப்பாளைய வீடு, சுவாமிஜியின் உடன்பிறந்த சகோதரர்களின் புகைப்படங்களும் ஆகும். சுவாமிஜியின் பாட்டனார்(தாத்தா) பெரியகண்டீ கவுண்டர் அவர்களின் புகைப்படம், சுவாமிஜியின் அண்ணன்மார்கள் மூவர் – சிதம்பரம், ரத்தினசபாபதி, சுந்தரம் – ஆகியோரின் புகைப்படங்கள் இதுவரை யாரும் கண்டிராதவை.

சின்னு பள்ளிக் கல்வி பயின்ற காலத்தில் ஆங்கிலேயர் பள்ளியில் பயின்றதால் அவரது நடையுடை பாவனையிலும் ஆங்கில பாணி தெரியலாயிற்று. விடுமுறைகளில் கிராமத்திற்கு வந்த சின்னு கோட், சூட் அணிந்து, கழுத்தில் டையுடன் காட்சி தந்துள்ளார். இதற்கு சான்றாக இப்புத்தகத்தில் அவரது பள்ளிப் பருவ புகைப்படங்கள் திகழ்கின்றன.

ஸ்டேன்ஸ் உயர்நிலைப் பள்ளியின் தாளாளருடன் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தபோவன பழைய மாணவர்கள், துறவியர், அம்பாக்கள் பார்த்திருப்பர். ஆனால் ஸ்டேன்ஸ் யூரோப்பியன் பள்ளிப் புகைப்படமும், சின்னு கேம்பிரிட்ஜ் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றதை தெரிவிக்கும் பள்ளியின் ஆண்டறிக்கையும் இதுவரை பார்த்திராதவை.

பழநி சாது சுவாமிகள் பெரிய சுவாமிஜி இளமைக்காலத்தில் சந்தித்த ஒரு மகான். பழநி சாது சுவாமிகளை இக்காலத்தவர் யாரும் பார்த்திலர். அவரது புகைப்படம் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. அதேபோன்று சுப்பையா சுவாமிகள், மோனநிலையில் ‘பார்க்காத பார்வையில்’ அமர்ந்திருக்கும் ராஜா மஹராஜ் அல்லது சுவாமி பிரம்மானந்தர், பக்கவாத நோயின் பிடியிலும் அருளாசி வழங்கும் மகாபுருஷ மஹராஜ் என்று மகான்களின் புகைப்படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

மிகவும் அரிதானது மைசூர் மன்னரின் ராஜகுருவாக விளங்கிய, அத்வைத வேதாந்தி மைசூர் ஸ்ரீ சுப்பிரமணிய ஐயர் அவர்களின் புகைப்படம் ஆகும். ஊட்டியில் இருந்தபோது மகாபுருஷ மஹராஜ் அவர்களின் ஏற்பாட்டில் பெரிய சுவாமிஜி மைசூர் சுப்பிரமணிய ஐயர் அவர்களிடம் சில காலம் அத்வைத வேதாந்தத்தை கற்றுள்ளார்.

ஊட்டி ராமகிருஷ்ண மடத்தின் அடிக்கல் நாட்டுவிழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், மகாபுருஷ மஹராஜ் சுவாமி சிவானந்தர் கைப்பட எழுதிய கடிதம், சுவாமி விரஜானந்தருடன் ஊட்டி ஆசிரமத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம், கயிலைமலை சென்றபோது சுவாமிஜி எடுத்த புகைப்படத்தின் ஸ்லைடுகள், ஊட்டியில் கலைமகள் சேவா சங்கம் துவக்கவிழாவின்போது எடுக்கப்பட்ட குரூப் போட்டோ. 1940ல் எடுக்கப்பட்ட திருச்சி மலைக்கோட்டை புகைப்படம் குற்றால அந்தர்யோக புகைப்படங்கள் என்று இதுவரை நாம் கண்டிராதவைகளே இப்புத்தகத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக 1942ல் திருப்பராய்த்துறையில் கட்டப்பட்ட ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் முதல் கட்டிடம் முதல் பாக புத்தகத்தின் பின் அட்டையில் காண முடிகிறது.

Back Page

முதல் பாக புத்தகத்தின் பின் அட்டை

சுவாமிஜியின் துறவற சீடர்களில் சுவாமி சாந்தானந்தரையும், சுவாமி துருவானந்தரையும் 1980களில் தபோவனத்தில் பயின்ற பழைய மாணவர்கள் சந்தித்திருப்பர். 1985க்குப் பிறகு பயின்ற மாணவர்களுக்கெல்லாம் அவர்களைப் பற்றி தெரிந்திருக்க முடியாது. அவர்களுடைய புகைப்படங்கள் 2 ஆம் பாகத்தில் காண முடிகிறது.

சுவாமிஜியின் மெய்யடியார்கள் ராமநாதன் செட்டியார், சி.யு. நஞ்சப்பா, அருணாசலம் செட்டியார், குற்றாலலிங்கம் பிள்ளை, எஸ்.வி. ராமசாமி, நடராஜ நாடார், செல்லச்சாமி முதலியார், ராமராஜ், ராஜா சங்கரலிங்க நாடார், அருணகிரி என்று ஒரு பெரிய அடியார் திருக்கூட்டத்தையே கண்முன் நிறுத்தியுள்ளனர். சேலம் சாரதா சமிதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை தபோவன விழா மலர்களில் கண்டிருக்கிறோம். ஆனால் சமிதி அம்பாக்கள் சந்நியாசம் ஏற்கும் முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இந்த புத்தகத்தில் சேர்த்திருக்கிறார்கள். சுவாமிஜியுடன் நெருங்கிப் பழகிய அடியார்கள் இப்பொழுது இந்த புகைப்படங்களை பார்க்கும்பட்சத்தில் வயதுமுதிர்ந்தவர்களுக்கு பழங்கால நினைவுகளை அலையலையாக மனத்திரையில் எழச்செய்யும்.

3ஆம் பாகத்தில் தபோவன கிளை ஸ்தாபனங்களின் புகைப்படங்கள் இடம்பெறுகின்றன. திருவேடகக் கல்லூரி, பாரத்வாஜ ஆஸ்ரமம், தாயுமானவர் தபோவனம், கன்னியாகுமரி விவேகானந்தர் கோயிலின்முன் நடக்கும் ஐக்கிய வழிபாடு என்று நிறைய சொல்லலாம். சுவாமிஜியின் மலேசிய பயணத்தின்போது எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் அரிதானவை.

இத்தகைய அரிய புகைப்படங்கள் பெரும்பாலும் 1997-98ஆம் ஆண்டில் நடைபெற்ற சித்பவானந்தர் நூற்றாண்டு விழா சமயத்தில் கண்காட்சி வைப்பதற்காக பல இடங்களிலிருந்து சேகரித்த புகைப்படங்களின் தொகுப்பு ஆகும். அந்த புகைப்படங்களை தற்பொழுது இந்த புத்தகத்தில் பயன்படுத்தியுள்ளனர் என்று முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

– Review by Admin.

கிடைக்கும் இடம்:

Sri Saradha Asramam,

58, Manakkula Vinayagar Street,

Saradha Nagar,

Opposite to Ramanasramam Post Office,

Thiruvannamalai – 606 603.

Phone: 04175 – 235 246, 9442131956, 8610903226.

Email: ykpamba@gmail.comssatvmal@gmail.com,

விலை: 675/- (3 பாகங்களுக்கும்)

Parcel, Courier Expenses: 

₹ 100/- (Tamil Nadu)

₹ 130/- (South India)

₹ 160/- (North India)

Advertisements

A Review – Vedantam thanda Veera Thuravi Swami Chidbhavananda book

அன்பார்ந்த பக்தர்களுக்கு வணக்கம்.

‘வேதாந்தம் தந்த வீரத்துறவி சுவாமி சித்பவானந்தர்’ நூலை அறிமுகம் செய்வித்தல் பொருட்டு வாசகர்களுக்கு ஒரு பதிவு உருவாக்கியிருந்தோம். இதோ அந்த பதிவு:

https://swamichidbhavananda.wordpress.com/2018/04/23/vedantam-thanda-veera-thuravi-swami-chidbhavananda-tamil-book/

மேலே உள்ள பதிவில் இந்த புத்தகங்கள் ஆதாரப்பூர்வமான தகவலைக் கொண்டது என்றும், பல அரிய தகவல்களை அளிக்கிறது என்றும் எழுதியிருந்தோம். இப்புத்தகத்தில் உள்ள தகவல்கள் ஆதாரப்பூர்வமானது மற்றும் அரியது என்று உறுதியாகக் கூறுவதற்கு சிற்சில சான்றுகளை வாசகர் முன் வைக்கிறோம். அவை இந்நூலின் உண்மைத் தன்மையை தெற்றென விளக்கும்.

நூலாசிரியரைப் பற்றி:

முதலில் இந்நூல் ஆசிரியரைப் பற்றி வாசகர்கள் அறிந்துகொள்வது நல்லது. இந்நூலின் ஆசிரியர் யதீஸ்வரி ஸ்ரீ கிருஷ்ணப்ரியா அம்பா அவர்கள். அம்பா அவர்கள் 1984ஆம் ஆண்டு ஸ்ரீமத் சித்பவானந்த சுவாமிகளிடம் துறவறம் பெற்றவர். ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்களின் 88 ஆண்டு கால நீண்ட வாழ்வில் கடைசி 3 ஆண்டுகள் அவரை நேரில் சந்தித்துப் பேசி, இருளை நீக்கும் அவரது அருளை உணர்ந்து பயன்பெறும் வாய்ப்பு இந்நூலாசிரியர்க்குக் கிட்டியது.

இந்நூலை எழுதுவதற்கு தகவல்கள் எப்படி சேகரிக்கப்பட்டன?

இந்நூலின் நாயகரான பெரிய சுவாமிஜி சித்பவானந்தர் அவர்களிடமிருந்து நூலாசிரியர் நேரே கேட்டு பெற்ற தகவல்கள், தபோவன அலுவலக ஆவண காப்பகத்தில் 1941ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டுகளாக சேகரித்து வைக்கப்பட்டுள்ள ஆண்டறிக்கைகள், கடிதங்கள், சுவாமிகளின் அணுக்கச் சீடர்களான துறவியர், அம்பாக்கள், மெய்யடியார் சிலர்க்கு சுவாமிகள் தம்மைப்பற்றி அவரே அரிதாக வெளியிட்ட விஷயங்கள் என்று இந்நூல் எழுதுவதற்கு ஆதாரமாய் அமைந்த தகவல்களை “வாசகர்க்கு சில வார்த்தைகள்” என்ற முகவுரையில் இந்நூலாசிரியர் தெரிவிக்கிறார். இவ்வாறு கிடைத்த நம்பகமான தகவல்களைக்கொண்டு சுவாமிகளின் வாழ்க்கை சம்பவங்களையும், ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் ஸ்தாபிக்கப்பட்ட வரலாற்றுப் பின்னணியையும் நூல் முழுவதும் ஆதாரப்பூர்வமாக விவரித்து இருக்கிறார், ஆசிரியர். இன்னும் பல தகவல்களை ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம், வேதாந்த கேசரி, பிரபுத்த பாரதம், தர்மசக்கரம் பத்திரிக்கைகளின் பழைய இதழ்களிலிருந்து சேகரித்திருப்பது சுவாமிஜியின் வாழ்க்கையை வரலாற்று ரீதியாக இந்நூலில் எழுதுவதற்கு உதவியிருக்கின்றன.

நம் மனதில் உதிக்கும் கேள்விகள் சில:

இதுநாள் வரை சுவாமிஜியின் வாழ்க்கையில் நடைபெற்ற பல சுவையான நிகழ்ச்சிகளை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் அந்நிகழ்ச்சிகள் உணர்த்தும் செய்தி யாது? என்று பதிவு செய்யப்படவில்லை. அந்தக் குறையை இந்நூல் நிறைவு செய்கிறது. வெறுமனே நிகழ்ச்சிகளைக் குறிப்பிடாமல் அதற்கான விளக்கத்தை அளித்திருப்பது வேதாந்தத்தை அறிவால் புரிந்துகொள்வதோடு மட்டும் நில்லாது, வாழ்க்கை நியதியாக நடைமுறைப்படுத்துவது எவ்வாறு என்பதை சுவாமி சித்பவானந்தர் என்ற உதாரண புருஷரின் மூலமாக இந்நூலை வாசிப்போருக்கு விளக்குகிறது.

சுவாமியை பற்றி இந்நூலாசிரியர் எடுத்துரைக்க முற்பட்டது எதனால்? என்பது கேள்வி.

தகுதியினால் அல்ல, ஆசையினால் என்கிறார், இந்நூலாசிரியர்.

சுவாமிகளைப் பற்றி எழுத தைரியம் வந்தது எப்படி? மற்றொரு கேள்வி.

தைரியம் வந்தது தகுதியினால் அல்ல, சுவாமிகளது கருணையினால் என்கிறார் நூலாசிரியர் மற்றொரு இடத்தில்.

யார் அனுமதி வழங்கியது?

அந்தர்யோகம், சத்சங்கம், நிர்வாக விஷயம் என்று பலவிதப் பணிகளை வைத்துக்கொண்டு 2 மாதங்களுக்கு ஒரு முறை ஸ்ரீமத் சித்பவானந்த சுவாமிகள் சேலம் சமிதி வந்தபோது, சத்சங்கத்தில் சுவாமிகளைக் குடைந்து குடைந்து கேட்டு அம்பா பல செய்திகளை சுவாமிகளிடமிருந்து நேரே கேட்டறியும் பாக்கியம் பெற்றார். சுவாமிகளின் இறுதி நாட்களில் அவரைச் சென்று வணங்கி அவரது வரலாறை எடுத்துரைக்க அனுமதியும், ஆசியும் வேண்டிய அம்பாவை மதித்து ஆசி வழங்கியுள்ளார் சுவாமிகள். தமது வாழ்க்கை வரலாற்றை எழுத சிஷ்யைக்கு அனுமதியும் ஆசியும் அளித்த ஒரு மாதத்தில் சுவாமிகள் தமது தேகத்தைத் துறந்தார்.

இந்நூலின் உண்மைத்தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு:

நீண்ட காலமாக நிலவி வந்துள்ள சில கருத்துக்கள் வரலாற்று ரீதியாகத் தவறானவை என்பதை நூலாசிரியர் தகுந்த ஆதாரங்களோடு நிரூபிக்கிறார்.

மேற்படிப்புக்காகச் சின்னுவை இங்கிலாந்து அனுப்ப வேண்டும் என்று சின்னுவின் பெற்றோர் விரும்பினர் என்பது பரவலாக நம்பப்பட்டு வருகிறது. சின்னு தன் குடும்பத்தாருக்கு எழுதிய கடிதங்களைப் படிக்கும்போது, மேற்படிப்புக்காக இங்கிலாந்து செல்ல விரும்பியவர் சின்னுவே, பெற்றோரும் குடும்பத்தாரும் அதற்கு இசைந்தனர், பிறகு சின்னுவே அதை மாற்றிக்கொண்டார் என்பதை முதல் பாகத்தில் 4 மற்றும் 5 அத்தியாயங்களில் விளக்கமாக எழுதியுள்ளார் அம்பா.

பி.ஏ. படிப்பை முடிக்காமலே பேலூர் செல்கிறார் சின்னு என்பது பரவலாக நம்பப்பட்டு வந்துள்ள மற்றொரு கருத்து. பி.ஏ. படிப்பின் இறுதித் தேர்வு எழுதிய பின்னரே சின்னு பேலூர் செல்கிறார் என்பன போன்ற உண்மைகள் இந்நூலை வாசிப்போர் கவனத்திற்கு வருகின்றன.

இந்நூலை எழுதியதன் நோக்கம் என்ன?

இந்த வரலாற்றைப் படிக்கத் தூண்டுவதன் நோக்கம் சுவாமி சித்பவானந்தர் என்ற மாமனிதரைப் பற்றித் தெரிந்துகொள்ள வைப்பது மட்டுமல்ல. அது துவக்கம் மட்டுமே. வாழ்ந்து காட்டிய அந்த மகானின் வழி செல்வதற்கு ஆசிரியருக்கும், வாசகருக்கும் உற்றதொரு தூண்டுகோலை அளிப்பதே இந்நூலை எழுதியதன் நோக்கம்.

கிடைக்கும் இடம்:

Sri Saradha Asramam,

58, Manakkula Vinayagar Street,

Saradha Nagar,

Opposite to Ramanasramam Post Office,

Thiruvannamalai – 606 603.

Phone: 04175 – 235 246, 9442131956, 8610903226.

Email: ykpamba@gmail.com, ssatvmal@gmail.com,

First Page

வேதாந்தம் தந்த வீரத்துறவி சுவாமி சித்பவானந்தர்

விரிவான வாழ்க்கை வரலாறு – 3 பாகங்கள்.

விலை: 675/- (3 பாகங்களுக்கும்)

Parcel, Courier Expenses: 

₹ 100/- (Tamil Nadu)

₹ 130/- (South India)

₹ 160/- (North India)

நூல் ஆசிரியரின் வேறு பல நூல்கள்:

  1. ஆத்ம சாதனையின் அற்புதம். வெளியீடு: அருட்துணை மாதர் சங்கம், மதுரை. ஆண்டு 2000
  2. Swami Vivekananda (English). வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை. ஆண்டு 2001.
  3. இல்லந்தோறும் இறைவழிபாடு. வெளியீடு: ஸ்ரீ சாரதா ஆஸ்ரமம், திருவண்ணாமலை. ஆண்டு 2008.
  4. நிகரில்லா நிவேதிதா. வெளியீடு: ராஷ்டிர சேவிகா சமிதி, தமிழ்நாடு. ஆண்டு 2011.
  5. வினா விடையில் ஒரு வியத்தகு வாழ்வு. வெளியீடு: ராஷ்டிர சேவிகா சமிதி, தமிழ்நாடு. ஆண்டு 2011.
  6. நிவேதிதை நூற்றைம்பது. வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலை, சென்னை. ஆண்டு 2016.
  7. ஸ்ரீ தாயுமானவரின் பராபரக்கண்ணி காட்டும் ஜீவ யாத்திரை. வெளியீடு: ஸ்ரீ சாரதா ஆஸ்ரமம், திருவண்ணாமலை. ஆண்டு 2017.

– Review by Admin.